தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவருக்கு ஜாமீன் கேட்டு அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ரவீந்தர் ஜாமீன் கேட்டு மீண்டும் கோர்ட்படி ஏற இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்தது. நீதிமன்றம், 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சிறையில் இருந்து திரும்பிய கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு மஹாலக்ஷ்மி எமோஷ்னல் ஆக பேசி இருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “U never fail to bring smile on me.. The reason for love on any one is trust. But here trust loves u more than me!! Shower the same love and protect me like before.. Love you loadsssss Ammu’ என்று பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…