இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்புதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில், மேகி நூடுல்ஸ் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று புதன்கிழமை மாலை பாலத்தைக் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் உயரத்திலிருந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தால் லாரி சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டதால், அதன் ஓட்டுநர் லாரியின் உள்ளேயே சிக்குண்டார்.
வெள்ளப்பெருக்கு மிகக் கடுமையாக இருந்த காரணத்தால் மீட்புக் குழுவினரால் உடனடியாகச் செயல்பட்டு ஓட்டுநரைக் காப்பாற்ற முடியவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே, ஆற்றில் மூழ்கியிருந்த லாரியை அடைந்து, அதில் சிக்கியிருந்த ஓட்டுநரின் உடலை மீட்புக் குழுவினர் சடலமாக மீட்க முடிந்தது.
https://www.instagram.com/reel/DbISkJRN1pI/?utm_source=ig_web_button_share_sheet
இக்கொடூர விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் யார் என்பது குறித்தும், வாகனக் கோளாறு அல்லது மழை பொழிவால் ஏற்பட்ட கவனச்சிதறல் போன்ற எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
