தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
அவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இப்படியான நிலையில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி விடுபட்ட தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
