போடு ரகிட ரகிட… மகளிர் உரிமைத்தொகை உயர்வு… அதிரடி காட்டும் திமுக… வெளியாக போகும் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உயரும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இன்று முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தலாம் என்று பேசப்பட்டதாக தெரிகிறது.

2021 தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 1500 ரூபாய் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த வியூகத்தை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 1500 ரூபாயாக உயர்த்தி திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடலாம் என்று திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.