மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்களுக்கு அந்தத் தொகை இன்னும் வழங்கப்படாத நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகையையும் தவெக அரசு படிப்படியாக நிறுத்தி வருவதாகப் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 செப்டம்பர் மாதம் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையைத் தொடர்ந்து வழங்க உத்தரவிட்ட அரசு, திட்டத்தின் பெயர் மாற்றம், பயனாளிகள் விவரம் மற்றும் வங்கிக் கணக்குகளின் IFSC குறியீடு சரிபார்ப்புப் பணிகள் முடிந்ததும் ரூ.2,500 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இருப்பினும், இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பல பெண்களுக்குக் கடந்த 3 மாதங்களாக ரூ.1,000 கூட வழங்கப்படவில்லை என அச்செய்தியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், அறிவித்த ரூ.2,500-ம் கிடைக்காமல், ஏற்கனவே வந்து கொண்டிருந்த ரூ.1,000-மும் நின்றுவிட்டதா என்ற அச்சமும் குழப்பமும் குடும்பத் தலைவிகளிடையே எழுந்துள்ளது.
விரைவில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவுள்ள சூழலில், பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அரசு நிறுத்தினால் அது பெரும் அதிருப்தியையும் அரசியல் பின்னடைவையும் ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒருவேளை வங்கிக் கணக்குப் பிழைகள் அல்லது தகுதிச் சரிபார்ப்புக் காரணமாகவே சிலருக்குப் பணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அது குறித்த உண்மை நிலையை தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு, எதற்காகப் பணம் நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் மீண்டும் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…