ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உங்களுடன் ஸ்டாலின் முகாமை மிஸ் பண்ணிட்டிங்களா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளால் சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்பங்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கத்தில், அரசு தற்போது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக புதிதாக சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விண்ணப்பதாரர்களில் வருமான வரி செலுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி இந்த புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.

   

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.