10க்கும் மேற்பட்ட வழக்குகள்… உச்சி குளிரும் பகீர் திட்டம்…. சமயநல்லூரில் பிரபல ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா ஓட ஓட வெட்டிக் கொலை….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் பிரபல ரவுடியான ‘குட்டி சாக்கு’ என்ற சூர்யா வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா மீது கொலை மற்றும் அடிதடி உள்ளிட்ட பத்து வழக்குகளுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பழைய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தில் அவர் மது அருந்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்த சூர்யாவை குறிபார்த்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இக்கொலைச் சம்பவமானது முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் மதுரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.