மதுரை மாவட்டம் புது விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த யுவராஜ் மீது கொலை முயற்சி, வீட்டில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே யுவராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான சபாபதி, சியாம் குமார் ஆகியோருக்குமிடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பிரச்சனையின்போது சபாபதியின் அம்மாவை யுவராஜ் அடித்துள்ளார். இதனால் யுவராஜ் மற்றும் சபாபதியின் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் யுவராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று இருந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக மதுரைக்கு வந்துள்ளார்.
தீபாவளி என்று பட்டாசுகளை வெடித்து விட்டு இரவு யுவராஜ் அவருடைய நண்பரான சித்தன் (19) என்பவரின் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த ஷியாம், சபா, சஞ்சய் விக்கி மற்றும் பிரசாத் உள்ளிட்ட ஏழு நபர்கள் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் வந்து, நீ மதுரைக்குள் வந்தால் எங்களுக்கு தெரியாதா, நீ எல்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது என்று கூறி யுவராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். அந்த சமயத்தில் யுவராஜ் நண்பர் தடுக்க முயன்ற நிலையில் அவரையும் தலையில் வெட்டியுள்ளனர். இதனை கண்டதும் யுவராஜின் சகோதரிகள் கத்தியபடி ஓடி வந்ததை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. பிறகு உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யுவராஜ் மற்றும் சித்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷியாம் மற்றும் சபாபதி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சிகிச்சையில் இருந்த சித்தன் சிகிச்சை பழம் இல்லாமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். தன்னுடைய அம்மாவை அடித்த யுவராஜை பழிவாங்குவதற்காக கொலை செய்ய வந்த சபாபதி கும்பலால் நண்பனை காப்பாற்ற முயன்ற சித்தன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…