FLASH NEWS: அதிமுக பிரமுகர் தலை துண்டித்துக் கொலை… மதுரையை அதிரவைத்த அதிகாலை கொடூரம்….!

By Nanthini on மாசி 6, 2026

Spread the love

மதுரை மாவட்டம் சாமநத்தம் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவர், அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும், அதிமுக பிரமுகராகவும் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவர் வழக்கம்போல தனது தேநீர் கடையைத் திறக்கச் சென்றபோது, அங்கு வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த சிலைமான் காவல்துறையினர், செந்தில்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஒரு போதைக் கும்பல் இந்தத் துணிகரக் கொலையைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மதுரையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.