மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் திடீரென பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே சிதாவ்னா கிராம பகுதியை சேர்ந்தவர்கள்.
இது பற்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகையில், மொத்தம் 13 பேர் புனித யாத்திரை சென்ற போது பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியது என தெரிவித்தனர். சாலையோரம் இவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் வேகமாக வந்த கார் திடீரென டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
