56 வயதிலும் குறையாத அழகு.. ரஜினி பட நடிகை கட்டிருக்கும் புடவையின் விலை இத்தனை லட்சமா?..

By Mahalakshmi on ஏப்ரல் 21, 2024

Spread the love

சினிமாவில் இருந்து பீல் டவுட் ஆனாலும் சில நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது மிகவும் அழகாக தங்களை காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். முன்பெல்லாம் நடிகைகள் 10 வருடங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் அவ்வளவாக நடிக்க மாட்டார்கள்.

   

ஆனால் இன்றைய சூழலில் திருமணத்திற்கு பிறகும் கூட நடிகைகள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் மாதுரி தீக்ஷித். பாலிவுட் நடிகையான இவர் 56 வயதான நிலையிலும் அழகாக இளமையாக காட்சியளித்து வருகிறார்.

   

 

டாப் ஹீரோயினியாக கொடிகட்டி பறந்த மாதுரி தீக்ஷித். ஹிந்தியில் உத்தன் தக்ஷித் என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலிவுட்டின் உச்ச நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் மாதுரி தீக்ஷித்.  56 வயதானாலும் தனது இளமை குறையாமல் இருந்து வருகின்றார்.

சமீபத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு அவரைக் காண ஏகப்பட்ட மக்கள் குவிந்தனர். அந்த கடை திறப்பு விழாவிற்கு நடிகை மாதுரி தீக்ஷித் அணிந்து வந்த புடவை தான் செம ட்ரெண்டானது. இந்த புடவையின் விலையை கேட்டால் ஷாக்காகி விடுவீர்கள். இந்த புடவையின் விலை 1.25 லட்சமாம்.