அலைபாயுதே கார்த்திக்கை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் யாராலும் மறக்க முடியாது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்வர்யா ராய் தான் நமக்கு உலக அழகி அதுபோல், எத்தனை அழகான நடிகர்கள் வந்தாலும் சாக்குலேட் பாய் என்றால் அது மாதவன் தான். தன் வாழ்நாளில் பல கேரக்டர்களில் நடித்துள்ள மாதவன் இன்றும் சாக்குலேட் பாய் ஆக தான் நம் மனதில் நிற்கிறார்.

Madhavan and sarita
என்னதான் சாக்குலேட் பாய் என்ற பட்டம் இருந்தாலும் எந்த சர்சையிலும் சிக்காதவர் மாதவன். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே சரிதா என்பவரை காதலித்து கரம் பிடித்தவர். கிட்டத்தட்ட 25 வருடங்களாக தன் மனைவியுடன் சந்தோசமாக வசித்து வரும் மாதவன் இந்த காலத்து இளைஞர்களுக்கு கல்யாணம் குறித்து அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Madhavan advised youngsters to get married soon
அவர் கூறியுள்ளதாவது, சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை. இந்த காலத்தில் கெரியர் முக்கியமாகி விட்டது. 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம் ந நினைக்கிறார்கள். ஆனால் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு காரணம் உண்டு, நீங்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும்போது, கஷ்டம் சந்தோசம் என அனைத்தையும் சேர்ந்து எதிர்கொள்வீர்கள்.
பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் வைத்து கொள்ள மாட்டீர்கள். குழந்தை பிறந்தால், அவர்களோடு நீங்களும் வளர்வீர்கள். பேரக்குழந்தைகள் வரும்போது, அவர்களுடன் விளையாடுவதற்கு, அவர்களோடு சேர்ந்து வாழவதற்கு மனது இளைமையாகவே இருக்கும். ஆனால் வயதான பி திருமணம் செய்து கொண்டால், பிரச்சனைகள் அதிகம் வரும். உங்கள் மனநிலை மாறிவிடும், எதையும் சேர்ந்து செய்ய மாட்டர்கள். அதன் விளைவு விவாகரத்து தான்.

Madhavan advised youngsters to get married soon
உங்களுடைய மனைவி அல்லது கணவனோடு சேர்ந்து இந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றால் திருமணத்தை தள்ளிப்போட கூடாது, பிரியாமல் வாழ வேண்டும் என்றால் சந்தோசம், துக்கம் இவை இரண்டையும் சேர்ந்து சந்திக்க வேண்டும், இதுதான் காரணம், அதனால் தான் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கின்றனர் பெரியோர் என்கிறார் மாதவன்.