போடு செம…! மதராஸி படத்தின் “வழியிறேன்” பாடலை ரிலீஸ் செய்த படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஆவணி 24, 2025

Spread the love

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முருகதாஸ் படம் என்றாலே தனி மவுசு உண்டு. முதல் முறையாக முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மதராஸி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது மதராஸி திரைப்படத்தின் இரண்டாவது பாடலை பட குழு வெளியிட்டது. இந்த பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன்.  வழியிறேன் என்ற வரிகளோடு தொடங்கும் பாடல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.