முதல் மனைவி இருக்கும் போதே சினிமா பிரபலத்துடன் காதல் வலையில் சிக்கினாரா மாதம்பட்டி ரங்கராஜ்?… தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

By Nanthini on பிப்ரவரி 22, 2025

Spread the love

புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். முதல்வர் முதல் பிரதமர் வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்து பாராட்டுக்களை பெற்றவர். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் இல்ல திருவிழாவில் கூட சமீபத்தில் கேட்டரிங் சர்வீஸ் செய்து இவர் அசத்தி இருந்தார். இதனைத் தவிர இவருக்கு சொந்தமாக அமெரிக்காவில் ஹோட்டலும் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை வழங்கி வருகின்றார்.

Cook With Comali Fame Chef Madhampatty Rangaraj Net Worth In Rupees |  சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா |  News in Tamil

   

சமையல் கலையில் மட்டுமல்ல இவருக்கு சினிமா மீதும் அதிக ஆர்வம் உள்ளது. சினிமா மீது கொண்ட ஆசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் சமீபத்தில் இவர் நடுவராக பங்கேற்று இருந்தார்.

   

 

இப்படி பல புகழுக்குரிய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. பொதுவாகவே சினிமாவிற்கு வந்து பிரபலமாகி விட்டால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது வழக்கம்தான். அதன்படி மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இவரும் அவருடைய ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறி நெட்டிசன்கள் சில இன்ஸ்டா பதிவுகளை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஷ் ஆக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஹார்டின் எமோஜிகளோடு அவர் பதிவிட்டது மட்டுமல்லாமல் அண்மையில் காதலர் தினத்தை அவருடன் தான் கொண்டாடியதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேசமயம் மாதம்பட்டி ரங்கராஜின் இனிப்பகத்தில் இருந்து பிரபலங்கள் சிலருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பி விட்டுள்ள ஜாய் அதில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாக குறிப்பிட்டு ஸ்டோரியும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகளை கண்டு குழம்பிப் போய் உள்ள நெட்டிசன்கள் இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவி வரும் நிலையில் இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் கொடுத்தால்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

article_image3