இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்பட இருந்த நிலையில் சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது. பல வருடங்கள் கழித்து அதே திட்டத்துடன் மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையில் மக்களை குதுகலிக்க வந்துள்ளது. சென்னை சத்தியம் திரையரங்கில் படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஷால் தனது படத்தின் ப்ரோமோஷன்காக தியேட்டருக்கு வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் இவரை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சுமார் 12 வருடம் கழித்து ரிலீசான இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணி வெற்றி பெற்றதா என்பதை இப்படத்தின் விமர்சனம் மூலம் பார்க்கலாம். படத்தில் கேபிள் டிவி நடத்தும் மதகஜராஜா விஷாலின் நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் இருவரும் கற்குன்றன் விஸ்வநாத்தில் பாதிக்கப்படுகின்றன. அரசியல் பலம் மற்றும் பணம் பலம் நிறைந்த வில்லனாக வரும் சோனு சூட்டை எதிர்த்து சண்டையிடும் சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டர் ஆன விஷால் தனது நண்பர்கள் இழந்த பணத்தை மீட்டாரா தன்னுடைய சவாலில் ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் காட்சி சந்தானத்தின் காமெடியுடன் தொடங்கி கலகலப்பை ஏற்படுத்துகின்றது.
நந்தகோபாலாக வரும் சந்தானம் சவத்தை சுமக்கும் வண்டி ஓனராக இருப்பதால் அவரை வெறுக்கும் மனைவி. இதனால் நந்த கோபாலிடம் இருந்து அவருடைய மனைவி விவாகரத்து கேட்கின்றார். ஆனால் நந்தகோபால் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம் மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் நீதிமன்றத்திற்கு செல்லாமல் வாய்தா மேல் வாய்தாவாக வாங்குகின்றார். இப்படி ஆளுக்கு ஒரு பிரச்சனையோடு பால்ய நண்பர்களான நந்தகோபால் மற்றும் மதகஜராஜா, சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின்சத்யா ஆகிய நான்கு பேரும் முன்னாள் பிடி சார் மகளின் கல்யாணத்திற்காக மதுரையில் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது சடகோபன் ரமேஷ் மனைவியின் தங்கையாக வரக்கூடிய வரலட்சுமி சரத்குமார் தனது அறிமுக காட்சியில் கவர்ச்சியில் குளியல் ஆட்டம் போடுகின்றார்.
அதைப் பார்த்து ஜொள்ளுவிடும் தனது மூன்று நண்பர்களையும் சடகோபன் ரமேஷ் கண்டிப்பது கலகலப்பான காமெடியுடன் கதை நகர்கின்றது. இதில் ஆர்யா டிக்கி பாபுவாக சேமியா ரோலில் திருடனாக நண்பர்களின் மனைவி இருக்கும் அறைக்குள் புகுந்து விவாகரத்து கேட்கும் நந்தகோபால் மனைவியின் மனதை மாற்றும் சென்டிமென்ட் காட்சிகள் சலிப்பை தட்டாத நட்புக்கு இலக்கணம். ஆர்யாவை ஆன்ட்டி லவ்வர்ஸ் என்று சந்தானம் கலாய்க்கும் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பொலையை ஏற்படுத்துகின்றன. படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம். சுந்தர் சி யின் ஒரு தரமான மேஜிக்கான சிரிப்பு வெளியுடன் கூடிய இந்த திரைப்படம் பொங்கல் விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
12 வருடங்களுக்குப் பிறகு வந்த படம் மாதிரியே இல்லை என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் நல்ல முத்துவாக மனோபாலா நடித்துள்ள நிலையில், சிட்டி பாபு, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் படத்தில் வந்து சிரிப்பழையை ஏற்படுத்துகின்றனர். படத்தில் மைடியர் லவ்வர் மற்றும் சிக்கு புக்கு ரயிலு வண்டியாகிய பாடல்களை எல்லாம் விஜய் ஆண்டனி தரமாக கொடுத்துள்ள நிலையில் படம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் படம் முழுவதும் லாஜிக் இல்லாமலும் வழக்கம் போல நடிகைகளை கவர்ச்சி பொருளாக சுந்தர் சி காட்சிப்படுத்தியுள்ள விஷயங்களும் மைனஸ் என்று தான் சொல்ல வேண்டும்.