நல்ல திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் காலமானார்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

By Mahalakshmi on மே 27, 2024

Spread the love

மாயி திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலை திடீரென்று மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த மாணிக்கம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். ராஜ்கிரண் அவர்கள் மிகப்பெரிய பிரபலமாக இருந்தபோது எடுத்த திரைப்படம். இப்படத்தில் ராஜ்கிரண் அவர்களுக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருப்பார்.

   

மேலும் இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் ராஜ்கிரண் தான். மாணிக்கம் திரைப்படத்தை தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் உடன் கூட்டணி வைத்தார். சூரிய பிரகாஷ் இந்த கூட்டணியில் உருவான திரைப்படம் மாயி.

   

 

கடந்த 2000 ஆண்டு ரிலீஸ் ஆன படத்தில் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். மாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக அமைந்தது. இதனால் மீண்டும் சூரிய பிரகாஷ் உடன் இணைந்து திவான் என்கின்ற திரைப்படத்திலும் சரத்குமார் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

சூரிய பிரகாஷ் கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் வருசநாடு. இப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் சூரிய பிரகாஷ் இன்று திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் ஒன்றை தெரிவித்து இருக்கின்றார்.

அதில் எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூரிய பிரகாஷ். இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் என்ற பதிவிட்டு இருந்தார்.