#image_title
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.
msv and balachander
ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ராமமூர்த்தியோடுதான் இணைந்து பணியாற்றினார். இருவரும் பணம் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இந்த வெற்றிக்கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து பணியாற்றியது.
இதில் விஸ்வநாதன் மெட்டமைப்பது பாடலைக் கேட்டு வாங்குவது போன்ற பணிகளைப் பார்த்துக்கொண்டால், ராமமூர்த்தி வாத்திய கோர்வை மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா ஆகிய பணிகளைப் பார்த்துக் கொள்வார். இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. இருவரும் பிரிந்த பின்னர் விஸ்வநாதன் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார். ராமமூர்த்திக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இளையராஜா வந்து மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கிய பின்னர் கூட விஸ்வநாதன் பிஸியான இசையமைப்பாளராகவே இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய மெட்டமைக்கும் ஸ்டைல் பற்றி இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் அவர் பேசியுள்ளார். அதில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற ‘எங்கேயும் எப்போது,’ என பக்கா வெஸ்டன் பாடலை எப்படி ஒரு நாட்டுப்புற பாடலில் இருந்து உருவாக்கினேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
ninathale inikkum movie
அதில் “ஒரு நாட்டுப்புற பாடலை வெஸ்டர்னைஸாக மாற்ற வேண்டும். ஆனால் அதை எந்த பாடலில் இருந்து மாற்றினோம் என்பது தெரியக் கூடாது என சொன்னார்கள். அந்த பாடல் என்னவென்றால் ‘கத்தாழக் காட்டிக்க்குள்ள விறகொடிக்க போனாளாம்…”என தொடங்கும். அந்த பாடலின் மெட்டைதான் நான் மெருகேற்றி “எங்கேயும் எப்போதும்” பாடலுக்கான ட்யூனை வார்த்தெடுத்தேன்.” எனப் பாடிக் காட்டியுள்ளார். அவர் அதை பாடிக் காட்டாவிட்டால் இரண்டு பாடல்களும் ஒரே மாதிரி இருப்பது நமக்கேத் தெரியாது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…