சங்கமம் படத்தில் அந்த பாடலை கடைசி போட்டுக் காட்டாத ரஹ்மான்… கடைசியில் ரேடியோவில் கேட்டு ஷாக் ஆன MSV

By vinoth on ஆவணி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

எம் ஜி ஆர் படங்களுக்கு மக்களைக் கவரும் வெகுஜன பாடல்களை இசையமைக்கும் எம் எஸ் வி சிவாஜி படங்கள் என்றால் தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் என்று குஷியாகிவிடுவார். அதனால் அவர் சிவாஜிக்கு இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.

   

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எம் எஸ் விக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 80 களில் சில படங்களுக்கு இசையமைத்த எம் எஸ் வி, 90 களில் இசையமைப்பதை நிறுத்தினார். ஆனால் அப்போதும் அவர் பாடகராகவும், நடிகராகவும் தொடர்ந்து சினிமாவில் இருந்துகொண்டுதான் இருந்தார்.

   

அப்போதுதான் அவரை சங்கமம் படத்தில் ஒரு சிறிய பாடலான ‘ஆலால கண்டா” என்ற பாடலின் ஒரு வெர்ஷனை  எம் எஸ் வி யைப் பாடவைத்தார் ரஹ்மான். அந்த பாடலை விதவிதமாக எம் எஸ் வியைப் பாட வைத்துள்ளார். அப்படி பாடி முடித்ததும் ‘பாடலை நான் கேட்கலாமா’ எனக் கேட்டாராம் எம் எஸ் வி. ஆனால் இன்னும் கொஞ்சம் வேலை மீதமிருப்பதால் முடித்ததும் போட்டுக் காட்டுகிறேன் எனக் கூறியுள்ளார் ரஹ்மான்.

 

இதையடுத்து பாடல் ரிலீஸாகி எதேச்சையாக பாடலை ரேடியோவில் கேட்டு ஷாக் ஆகியுள்ளார். அந்த பாடலை தான்தான் பாடினேனா என ஷாக் ஆகும் அளவுக்கு ரஹ்மான் அதை சிறப்பாக ஒலிப்பதிவு செய்திருந்தாராம். இந்த தகவலை உடனடியாக எஸ் பி பிக்கு போன் செய்து “தம்பி, நான் என்னென்னமோ பாடினேன். ஆனால் அவர் அதுல மேஜிக் செய்து பாட்டை வேறு மாதிரியாக கொண்டாந்துட்டார். பாடுறதுக்கு நிறைய சம்பளம் கொடுத்து அனுப்பினாருப்பா” என வியந்து பாராட்டினாராம். இந்த தகவலை தன்னுடைய நேர்காணல் ஒன்றில் எஸ் பி பி பகிர்ந்துள்ளார்.