MGR ஐ சுடுவதற்காக வாங்கிய துப்பாக்கி இல்லையாம்… MR ராதாவின் முதல் டார்கெட் இந்த நடிகர்தானாம்- சினிமா பிரபலம் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஜூலை 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் என்றால் அது சிவாஜிதான் என்று இப்போதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சிவாஜியே நடிப்பில் தன்னுடைய முன்னோடியாக, ஆதர்சமாக நினைத்தவர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா.

   

அதன் பிறகு நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் ராதா. அதனால் பிஸியான நடிகராக அவர் வலம் வந்தார். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆரோடு சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு எழ அதன் காரணமாக எம் ஜி ஆரை அவர் வீட்டில் சந்தித்து அவரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டார். ஆனால் நல்வாய்ப்பாக இருவருக்கும் ஒன்றும் ஆகாமல் உயிர் பிழைத்துக் கொண்டனர்.

   

இந்நிலையில் எம் ஆர் ராதாவைப் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன், ஒரு அரிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “எம் ஆர் ராதா எம் ஜிஆரை  சுடுவதற்கு முன்பே கலைவாணரை சுட வேண்டும் என்றுதான் அந்த துப்பாக்கியை வாங்கினாராம். ஏனென்றால் தான் நடித்த இழந்த காதல் நாடகத்தைப் படமாக எடுத்த கலைவாணர் அதில் தன்னை நடிக்கவில்லை என்ற கோபம்தான் காரணமாம்.

 

இதையறிந்த என் எஸ் கே ராதாவிடம் “டேய் நான் இன்னொரு நடிகரை வைத்து ஏன் படமெடுக்கிறேன் என்றால் அவன் சரியாக நடிக்கவில்லை என்றால் என்னால் விரட்டி வேலை வாங்க முடியும். ஆனால் உன்னிடம் ‘இப்படி நடி அப்படி நடி’ என்று நான் சொல்லமுடியுமா? அந்த அருகதை எனக்கு இருக்கா?’ எனக் கேட்டாராம். அதனால் மனம் மாறிய எம் ஆர் ராதா கண்ணீர்விட்டு அவரைக் கட்டித்தழுவினாராம்.