இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம்ஜிஆர். இப்படியான நிலையில் சத்யராஜின் தங்கைகள் திருமணத்தில் எம்ஜிஆர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது, கோவையில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில் தனது தங்கைகளின் திருமணத்தை சத்யராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக திருமண பத்திரிகையை எம்ஜிஆர்ிடம் கொடுப்பதற்காக ராமாவரம் தோட்டத்திற்கு சென்று இருந்த போது எம்ஜிஆர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டிலிருந்தார்.
ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிக்கையை கொடுத்த சத்யராஜ், அம்மா இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடைபெறுகிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும் தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும் நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சத்யராஜ் புறப்பட்டார். எம்ஜிஆர் எப்படி ஆனாலும் வர மாட்டார் என்றே சத்யராஜ் நினைத்துக் கொண்டிருந்தார். ஜூன் ஏழாம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஜூன் ஐந்தாம் தேதி சத்யராஜை சந்தித்த கோவை டிஎஸ்பி எம்ஜிஆர் திருமணத்திற்கு வர போகும் தகவலை உறுதி செய்தார். அதன் பிறகு ஜூன் 6ஆம் தேதி மாலையை எம்ஜிஆர் வந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டலில் தங்கியிருந்த எம்ஜிஆர் இடம் மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் நீங்கள் அவ்வளவு சீக்கிரம் வர வேண்டாம், 10 மணிக்கு வந்தால் போதும் என சத்யராஜ் கூறியுள்ளார். ஆனால் மறுநாள் காலை முகூர்த்தத்திற்கு முன்பாக நான்கு முப்பது மணிக்கு எம்ஜிஆர் மண்டபத்திற்கு வந்துவிட்டார். அங்கு எம்ஜிஆரிடம் தாலியை எடுத்துக் கொடுக்க சொன்ன சத்யராஜிடம் உங்கள் முறைப்படியே திருமணம் நடைபெறட்டும் என எம் ஜி ஆர் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் தனது தாயாரிடம் சத்தியராஜ் எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்த அப்போது எழுந்து நின்று எம்ஜிஆர் வணங்கியுள்ளார். இப்படி சத்யராஜ் எதிர்பாராத விதமாக வந்து எம்ஜிஆர் நெகிழ வைத்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…