Categories: சினிமா

5 வருடங்களுக்குப் பிறகு சல்மான் கான் மூலம் கம்பேக் கொடுத்தாரா ஏ.ஆர். முருகதாஸ்?.. படம் குறித்து வெளியான விமர்சனம் இதோ..!

Spread the love

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சிக்கந்தர். இந்த திரைப்படத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பிரிதோ சக்ரோபர்த்தி, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக ரஜினியின் தர்பார் படத்தை இயக்கியிருந்த நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த திரைப்படம் ஓபனிங் காட்சி போல எதிர்பார்ப்போடு ரிவ்யூவை பார்த்தால் ஆரம்பமே முகம் சுளிக்கும் வகையில் ரசிகர்களும் சிக்கந்தர் படத்தை பார்த்து கோபத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். அதாவது பழைய படத்தை காப்பி அடித்து எடுத்தது போல இந்த திரைப்படம் உள்ளதாம். படம் முழுவதும் பார்த்த காட்சியை திரும்ப பார்ப்பது போலவே இருந்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம் ஏ ஆர் முருகதாஸ் படம் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்த திரைப்படம் உள்ளது. மற்றொரு விமர்சனத்தை பார்க்கையில் சல்மான் கான் நடிப்பு உணர்ச்சி பொங்க உள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன. ஒரு சில காட்சிகளில் சல்மான் கான் மற்றும் சத்யராஜ் சண்டை காட்சிகளை பார்க்கும்போது தூக்கம் வருகிறதா. படத்தில் கதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை படம் பார்த்த காசு தான் வேஸ்ட் ஆகிவிட்டது என புலம்புகிறார்கள். ஏ ஆர் முருகதாஸ் நம்பியதற்கு நல்லா வச்சி செய்து விட்டார் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

சல்மான்கானின் முந்தைய படங்களை விட இந்த திரைப்படம் ஓரளவுக்கு நன்றாக உள்ளது என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி உள்ளது. இப்படி கலவையான விமர்சனங்களை சிக்கந்தர் திரைப்படம் பெற்று வரும் நிலையில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் தான்.

Nanthini

Recent Posts

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

52 seconds ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

11 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

15 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

16 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

20 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

26 minutes ago