ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தை பார்த்த லைகா தயாரிப்பு நிர்வாகிகள் – உடனடியாக போட்ட கண்டிஷன் இதுதான்!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பாக உள்ள நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமா களத்தில் வைப் ஏற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவான சிக்மா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்பாக சிக்மா படத்தின் டீசர் வெளியாகி இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்து போயிருக்கிறது.

சிக்மா டீசரை பார்த்த பலரும் மிரண்டு போய் ஜேசன் சஞ்சயை பாராட்டி வருகின்றனர். அதில் வரும் காட்சிகள் இது ஒரு வெற்றிப்படம்தான் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு தந்திருக்கிறது. இதற்கிடையே லைகா புரடக்சன்ஸ் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த படத்தை பார்த்த நிலையில் அசந்து போய்விட்டனர். நிச்சயம் இது ஒரு வெற்றிப் படம்தான் என்று நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஜேசன் சஞ்சயிடம், மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கண்டிஷனாகவே கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.