CINEMA
அஜித்தை வைத்து மாஸ்டர் ஸ்கெட்ச் போட்டா Lyca.. சுதாரித்த தல.. பொட்டி பாம்பா அடங்கிய தயாரிப்பு நிறுவனம்..
தற்போது போன வருட பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டபின், அதற்கடுத்ததாக தடம், கழகத் தலைவன் போன்ற மாபெரும் வெற்றிகளை குவித்த மகிழ்த்திருமேனி அவர்களுடன் இணைந்து “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் ஒரு வருட காலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் வெளியாக உள்ள இப்படம், இன்னும் படபிடிப்பை முடிக்காத நிலையில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் 63 வது படம் பற்றி அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா, AAA போன்ற படங்களில் எடுத்து படு தோல்வியை சந்தித்த ஆதிக்கவிச்சந்திரன் கடந்த ஆண்டு விஷால் மற்றும் எஸ் ஐ சூரியா அவர்களை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.
மாபெரும் வெற்றி அடைந்த பின் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் அஜித்தை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது, அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் சரியாக வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித்தின் 63-வது படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மை 3 மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் “குட் பேட் அக்லி”. தற்போது, ரசிகர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் இப்படத்தின் டைட்டளை பற்றியும் இப்பட அப்டேட்டை பற்றியும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அஜித்தின் 62 வது படத்தை பற்றி எந்த விஷயமும் வெளிய வராமல் இருக்கும் சமயத்தில் அஜித் 63வது படத்திற்கான அப்டேட் அள்ளித் தெளிக்கும்போது விடாமுயற்சி என்னதான் ஆனது என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். லைக்கா நிறுவனத்தில் நடக்கும் சில பல பிரச்சனை காரணத்தால் இப்படத்தை தற்போது ஓரம் கட்டி வைத்துள்ளார்களாம். அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அட்லி படத்தை வரும் ஜூன் மாசம் படப்பிடிப்பு துவங்க உள்ளதால், விடாமுயற்சி படத்தை இப்படத்திற்கு பின் பாக துவங்கி தீபாவளி சமயத்தில் லைக்கா நிறுவனத்தின் இன்னொரு படமான வேட்டையன் படத்துடன் களமிறக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் முதலில் ஆரம்பிக்கப்பட்ட விடா முயற்சி படம் 63 வது படத்தை தாண்டி வெளியிட்டால் அது ரசிகர் மத்தியில் மாபெரும் சலசலப்பை ஏற்படுத்தி விடும் என்று தற்போது, முடிந்த அளவு இப்படத்தை இயக்க மகிழ் திருமணி முயற்சி செய்கிறாராம். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அடித்து நகர்த்தி கொண்டு படத்தை எடுத்துச் செல்வதால் அஜித்தின் விடாமுயற்சி படம் என்ன கதியாக உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சி படத்தையே சரியாக கையாளாத லைக்கா நிறுவனம் அஜித்துடன் இன்னும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் போட முயன்றுள்ளார்கள். ஆனால் சுதாரித்த அஜித் அதற்கான பதிலையே இன்னும் தெரிவிக்காமல் இருக்கிறாராம். இப்படம் ஒன்றுக்கே லைக்கா நிறுவனம் அஜித்தை இந்த பாடு படுத்தும் பொழுது, இன்னும் இரண்டு படங்கள் எடுத்தால் அஜித்தின் மொத்த காரியத்தையும் இந்த இரண்டு படத்திலேயே முடித்து விடுவார்கள் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.