சீனாவின் வுஹான் நகரில் வசித்து வரும் அத்விக் என்ற இந்திய இளைஞர், தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘ஹோம் டூர்’ வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். வுஹான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்ட், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மிகச்சிறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சொகுசு வீட்டின் மாத வாடகை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30,000 மட்டுமே என அவர் குறிப்பிட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குறிப்பாக பெங்களூருவாசிகள் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூருவின் இந்திரா நகர் அல்லது கோரமங்களா போன்ற பகுதிகளில் இதேபோன்ற வசதிகளுடன் ஒரு வீடு தேடினால் வாடகை ரூ. 45,000-ஐ தாண்டும் என்றும், ஆனால் வுஹான் போன்ற ஒரு முக்கிய நகரில் மிகக் குறைந்த வாடகையில் இவ்வளவு சிறப்பான வீடு கிடைப்பது வியப்பளிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவின் அதிகப்படியான வீட்டு வாடகையுடன் ஒப்பிடுகையில் சீனாவில் வசிப்பது மலிவானது என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
