அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல்துறையினரின் அடையாளத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர் தனது தாடி மற்றும் மீசையை முற்றிலும் மழித்து, தனது தோற்றத்தையே மாற்றியிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விசாரணையில், கைதான அந்த வாலிபருக்குப் பயங்கரமான குற்றப் பின்னணி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீது ஏற்கனவே 17 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2018-ஆம் ஆண்டு மொரேனாவில் நடந்த கொள்ளைச் சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஸ்பா (Spa) மையங்கள் நடத்தி வந்த அவரது நண்பர்கள் சிலரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இந்தக் குற்றவாளியின் பின்னணி தற்போது ஜெய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.