விஜயகாந்த் சார் இறந்ததுனால இந்த படத்துல அவரை நாங்க வைக்கல.. மனம் திறந்த லப்பர் பந்து பட பிரபலம்..!!

By Nanthini on ஐப்பசி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முறையாக லப்பர் பந்து திரைப்படத்தில் ஹீரோ அட்டகத்தி தினேஷ் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

   

ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள நிலையில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்தப் படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல் பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது.

   

 

அதனைப் போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் படத்தில் கேப்டன் விஜயகாந்த் கொண்டாடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து TSK பேசியுள்ளார்.

அதில், படத்தில் விஜயகாந்த் சார் கொண்டாடப்பட்டதற்கு முக்கிய காரணம் தமிழரசன் சார் தான். சினிமாவில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரை கொண்டாட தனித்தனி இயக்குனர்கள் உள்ளனர். அதனைப் போல விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என்று தமிழரசன் சார் நினைத்தார். இந்த படம் சூட்டிங் எடுக்கும் போது விஜயகாந்த் உயிரோட தான் இருந்தார். இந்த படத்திற்கு கதை எழுத தொடங்கியது முதல் விஜயகாந்த் அதிலிருந்தார். தமிழரசன் சார் அவருடைய தீவிர ரசிகர். படத்தில் பூமாலை கதாபாத்திரம் முழுக்க முழுக்க விஜயகாந்த் ரசிகர் பற்றியதுதான். இது மட்டும் இன்னும் கேப்டனை கொண்டாடி இருக்க வேண்டும் என்று டி எஸ் கே பேசியுள்ளார்.