சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரத்தின்படி மாத தொடக்க நாளான நவம்பர் 1ஆம் தேதி இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 4.50 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 868.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
