இனி இவர்களுக்கு LPG சிலிண்டர் கிடையாது… மத்திய அரசின் புதிய ரூல்ஸ்…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக்….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

பிஎன்ஜி (PNG) இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் இனி நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு பெறும் நுகர்வோர், தங்களிடம் ஏற்கனவே உள்ள எல்பிஜி சிலிண்டர் இணைப்பை 30 நாட்களுக்குள் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும்.

ஒருவேளை, பிஎன்ஜி வாடிக்கையாளர்கள் இந்த எரிவாயு வசதி இல்லாத வேறு பகுதிகளுக்கு இடம்பெயர நேரிட்டால், அவர்கள் தங்களது எரிவாயு நிறுவனங்களிடம் இருந்து மாற்றுச் சீட்டை (Transfer Voucher) பெற்றுக் கொள்ளலாம்; இதனைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்குத் தேவையான புதிய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை மீண்டும் எளிதாகப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.