ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்… தமிழகத்தையே புரட்டி எடுக்க போகும் கனமழை… வந்தது அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

வங்க கடலில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகின்றது. இதனால் நவம்பர் 25ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இலங்கையை ஒட்டிய குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

ஏற்கனவே அந்தமான் கடலில் தற்போது சென்யார் என்ற புயல் சின்னம் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொளியாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது