லால் சலாம் படம் வசூல் ரீதியாக சரிவு.. 2 நாள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய லவ்வர் திரைப்படம்..

By Ranjith Kumar

Published on:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் கோடியில் வசூலை ஈட்டும் என தியேட்டர் ஓனர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர், ஆனால் இப்படம் 100 கோடி தொடுவதே கேள்விக்குறியாக தான் உள்ளது, லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், தம்பி ராமைய்யா, லிவிங்ஸ்டன், கபில் தேவ் என பெரிய ஸ்டார் காஸ்ட் உடன் வெளியான லால் சலாம் திரைப்படம் பட்ஜெட்டும் அதிகம் எனக் கூறுகின்றனர். ரஜினிகாந்தின் கேமியோ படத்தை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்லும் என பலரும் நம்பிய நிலையில், ஆனால் ரிசல்ட் அப்படி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, வசூல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை அந்த படம் சந்தித்து.


அதே சமயம் அந்த படத்துடன் சிறிய படமாக போட்டியிட்ட, பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா நடிப்பில் வெளியான மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி காதலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் தியேட்டருக்கு அந்த படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த வாரம் வெளியான படங்களில் விமர்சன ரீதியாக லவ்வர் சற்றே லால் சலாம் படத்தை முந்தியிருப்பதாக கூறுகின்றனர்.

   


முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூலுடன் தொடங்கிய லவ்வர் திரைப்படம் 2ம் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக 2 கோடியாக வசூல் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 3 கோடி ரூபாய் வசூலை லவ்வர் திரைப்படம் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூலுடன் தொடங்கிய லவ்வர் திரைப்படம் 2ம் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக 2 கோடியாக வசூல் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 3 கோடி ரூபாய் வசூலை லவ்வர் திரைப்படம் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.லால் சலாம் படம் 4.3 கோடி வசூலை ஈட்டியது இரண்டாவது நாளில் வெறும் 3 கோடி தான் படத்தின் வசூல் வந்தது, அதனை அடுத்து விடுமுறையான இன்று ஞாயிற்றுக்கிழமை வசூல் செய்யுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆக மொத்தம் லால் சலாம் படத்தை விட லவ்வர் படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

author avatar
Ranjith Kumar