சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் டைல்ஸ் வேலை செய்து வந்த 38 வயதுடைய சம்பத் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது.
சம்பத்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கஸ்தூரி கடந்த சில வாரங்களாக அவரிடம் பேசுவதைத் தவிர்த்து பழக்கத்தை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத், நவம்பர் 12 அதிகாலை கஸ்தூரியின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கி மார்பில் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த கஸ்தூரியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார், தலைமறைவாக இருந்த சம்பத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
