“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” கத்தியால் குத்தி கொன்று சாக்குமூட்டையில் கட்டிய காதலன்… வாலிபரின் வெறிச்செயல்…. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!!

By Devi Ramu on ஆவணி 17, 2026

Spread the love

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் ரேஹானா ஆகிய இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரேஹானா காதலன் சலாமிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சலாம், ரேஹானாவைக் கத்தியால் குத்திக் கொடூரமாகப் படுகொலை செய்து, அவரது சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாலாப்பூர் பொலிஸார், தலைமறைவாக உள்ள முகமது சலாமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.