பிரேசில் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இணையம் வழியே தனக்குக் கிடைத்த காதலியைக் காண தன் உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு சுமார் 1,900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். பல மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்த அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டு அவர் இந்த நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார்.
ஆனால், இலக்கை அடைந்து காதலியைச் சந்திக்க முயன்றபோது அவருக்குப் பேரிடி காத்திருந்தது. அவர் உருகி உருகி காதலித்த அந்தப் பெண் உண்மையான மனிதரே கிடையாது என்றும், அது அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் கதாபாத்திரம் என்பதும் அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது.
தன் சொத்துக்களை இழந்து, காதலின் பெயரால் அவர் மேற்கொண்ட இந்தத் துயரமான பயணம் இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயகரமான வளர்ச்சி எந்த அளவுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளதாகப் பலரும் பேசி வருகின்றனர்.
