சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாய், மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கொலையாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூரைச் சேர்ந்த சத்யா (33) என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில், தான் வேலை செய்த நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் (42) என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதமாக சத்யா இந்த உறவைத் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த 23-ஆம் தேதி இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவையும், அவருடைய 10 வயது மகன் கிஷாந்தையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தான். படுகாயமடைந்த சத்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். கொலை செய்த கையோடு தப்பி ஓடிய சக்திவேல், ஓமலூர் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் மகள் அந்தச் சமயம் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதேபோல கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஓமலூரில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீவித்யா என்ற ஆசிரியை, அவரது கணவர் விஜயமுருகனால் பள்ளி வளாகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பின்னர் விஜயமுருகன் தனது 5 வயது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். திருமணம் கடந்த உறவுகள் மற்றும் சந்தேகத்தினால் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த கொடூர சம்பவங்கள் சேலம் மாவட்ட மக்களை உலுக்கியுள்ளன.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…