அட கடவுளே… அவள் போன பின்னாடி நான் எதுக்கு?… விசாரணைக்கு பயந்து காதலன்… திரவம் குடித்து தற்கொலை முயற்சி… ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 25, 2026

Spread the love

ஹைதராபாத் மாதப்பூரில் உள்ள ஓயோ விடுதியில் இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் அப்பெண்ணின் காதலன் ரவி தேஜா மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர் காவல் துறையினருக்குப் பயந்து தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த ரவி தேஜா, ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், பரவாடா மண்டலத்திற்கு உட்பட்ட ஈடுமெட்லா – மரிப்பாலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் புதன்கிழமை தரை சுத்தம் செய்யும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

   

https://twitter.com/TeluguScribe/status/2102439396956057703/video/1

   

அவரைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு விசாகப்பட்டினத்தில் உள்ள கே.ஜி.எச் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.