பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டி உபாத்யாய் (20) என்ற திருமணமான பெண், தனது முதல் கணவரைப் பிரிந்து காதலன் ரிஷப் குமார் சிங்குடன் தத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் உள்ள சிலவாஸா பகுதிக்கு ஓடிவந்து மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என அப்பெண் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் 9 அன்று நடந்த கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ரிஷப் குமார் அப்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காகச் சடலத்தைக் கயிற்றால் கட்டி, பிளாஸ்டிக்கால் சுற்றி ஒரு ட்ராலி சூட்கேஸுக்குள் திணித்து அறையைப் பூட்டிவிட்டு வாரணாசிக்குத் தப்பியோடி தலைமறைவானான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பூட்டியிருந்த அறையை வீட்டு உரிமையாளர் திறந்தபோது சூட்கேஸில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தால் இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்துத் தீவிர விசாரணை நடத்திய உத்தரப் பிரதேச காவல்துறையினர், வாரணாசியில் போலி அடையாளத்துடன் தலைமறைவாக வேலை பார்த்து வந்த கொலையாளி ரிஷப் குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…