5 கோடி பட்ஜெட்டில் உருவான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா..? கேட்டாலே நெஞ்சு அடைக்குதே..

By Nanthini on செப்டம்பர் 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு இவர் சில குறும்படங்கள் இயக்கியுள்ளார். கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் தனது முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார்.

   

அதன் பிறகு திடீரென ஹீரோவாக நடிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால் ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கோலிவுட்டில் எமர்ஜிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார் என்று கூறலாம். இளம் காதல் ஜோடி தங்களது செல்போனை மாற்றிக் கொண்டால் வரும் பிரச்சனைகளை ஜாலியாக பிரதீப் ரங்கநாதன் படமாக்கி இருந்தார்.

   

 

இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்த நிலையில் மாபெரும் வசூல் குவித்தது. இந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 

author avatar
Nanthini