ஏற்கனவே 2 கல்யாணம்… இன்ஸ்டாவில் கட்டுமஸ்தான போட்டோஸ்… மயங்கிப்போன இளம்பெண்கள்… காதல் வலை வீசி காதல் மன்னன் செய்த காரியம்..!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். 39 வயதான இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் 2 திருமணம் செய்துள்ளார். அவர்களோடு குடும்பம் நடத்தி வந்த இவர் திருமண தகவல் மையம் மூலமாக மற்ற பெண்களுக்கும் வலை வீசியுள்ளார். இதனை அடுத்து தேனாம்பேட்டையை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான கணவனை இழந்த பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து சுரேஷ்குமாரை பார்ப்பதற்கு அந்த இளம் பெண் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் சந்தித்துள்ளார்கள். அப்போது ஆசை வார்த்தை கூறிய சுரேஷ்குமார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு இருவரும் காரில் அமர்ந்து பேசி உள்ளார்கள். அப்போது கையில் இருந்த இளம் பெண்ணின் பத்து சவரன் நகையை சுரேஷ் திருடியிருக்கிறார். சுரேஷ் குமார் சென்றபின்னர் 10 பவுன் நகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

   

இதுகுறித்த சுரேஷ்குமார் இடம் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இதுபோல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் எட்டுப் பெண்களை இதுபோல காதல் வலையில் சிக்க வைத்ததும் தெரியவந்துள்ள.து சுரேஷ்குமார் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக வைத்துள்ளார் .தன்னுடைய  கட்டுமஸ்தான போட்டோக்களை இன்ஸ்டாகிராம்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளம் பெண்களை அதன் மூலம் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். திருமணம் ஆகி கணவரைப் பிரிந்து அல்லது விவகாரத்து செய்து தனியாக இருக்கும் பெண்களை மட்டுமே அவர் குறி வைத்து இப்படி செயல்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.