“காதல் என்பது இன்பமான நேரங்களில் மட்டும் பகிரப்படுவது அல்ல, அது இருள் சூழ்ந்த காலங்களிலும் பிரியாமல் இருப்பதே”… வைரலாகும் பெண்ணின் கண்ணீர்க் கதை..!!!

By Rajeshwari on பங்குனி 15, 2026

Spread the love

மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியைச் சேர்ந்த சீமா சாட்டர்ஜியின் வாழ்க்கை, கடந்த 2025 அக்‌டோபர் 12 அன்று விஐபி சாலையில் நடந்த அந்த கோர விபத்திற்குப் பிறகு முற்றிலுமாக மாறிப்போனது. அந்த விபத்தில் படுகாயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற அவரது கணவர் ஆகாஷ், கடந்த ஐந்து மாதங்களாக எவ்வித அசைவுமின்றி மருத்துவப் படுக்கையில் உள்ளார்.

ஆனால், சீமா தன் நம்பிக்கையைச் சற்றும் கைவிடவில்லை. கணவர் ஒருநாள் நிச்சயம் மீண்டு வருவார் என்ற உறுதியோடு, அவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியத்தைத் தெளித்தும், அவர் கரங்களைப் பற்றி மென்மையாக முத்தமிட்டும், காதுகளில் அன்பான வார்த்தைகளைப் பேசியும் ஒவ்வொரு நாளும் அவர் அருகில் அரணாக நிற்கிறார். அனைவரையும் நெகிழச் செய்யும் சீமாவின் அன்பின் உச்சம், அவர் தினந்தோறும் மணப்பெண்ணைப் போல அலங்கரித்துக் கொள்வதுதான்.

   

மேலும் ஆகாஷிற்குத் தன் மனைவியை மணக்கோலத்தில் பார்க்க மிகவும் பிடிக்கும் என்பதால், என்றாவது ஒருநாள் அவர் கண் விழித்துப் பார்க்கும்போது தன்னை அதே அழகிய கோலத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சீமா இந்த முயற்சியைத் தொடர்கிறார். “காதல் என்பது இன்பமான நேரங்களில் மட்டும் பகிரப்படுவது அல்ல, அது இருள் சூழ்ந்த காலங்களிலும் பிரியாமல் இருப்பதே” என்பதை சீமா உலகுக்கு உணர்த்தி வருகிறார். பார்வை இல்லாத கணவருக்காகத் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த பெண்ணின் காதல், காலத்தையும் கடந்து நிற்கிறது.