அந்த ஜாதிக்கார பையன் நம்ம வீட்டு மருமகனா?… “கட்டி வைத்து சித்திரவதை.. கோடாரியால் வெட்டிப் புதைப்பு”…. தங்கை என்றும் பாராமல் உடன்பிறந்தவர்கள் செய்த கொடூரம்..!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், உம்ரி சப்ஜிபூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது அர்மான் (27), சவுதி அரேபியாவில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காஜல் சைனி என்ற பெண்ணுடன் அவருக்குக் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு காஜலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, காஜலின் சகோதரர்கள் அர்மானை பலமுறை எச்சரித்த போதிலும், இருவரும் மணம் முடிக்க உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜலைச் சந்திக்க அர்மான் சென்றபோது, ஆத்திரமடைந்த காஜலின் சகோதரர்கள் இருவரையும் பிடித்துக் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். ஆத்திரம் தணியாத அவர்கள், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, உடல்களை ரகசியமாகப் புதைத்துள்ளனர். அர்மானைக் காணவில்லை என்று அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக காஜலின் சகோதரர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரிங்கு மற்றும் சதீஷ் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பி ஓடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒருதலைப்பட்சமான கௌரவத்திற்காக இரண்டு இளம் உயிர்கள் பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 second ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

8 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

12 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

17 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

18 minutes ago