தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், முதலமைச்சரான விஜய்யின் அரசியல் பயணம் மட்டுமின்றி, அவர் அணியும் உடைகளும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, அரசு நிகழ்ச்சிகளில் அவர் பக்கா பார்மல் உடையில் ‘டக்கின்’ செய்து அணியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ‘லூயிஸ் விட்டான்’ நிறுவனத்தின் பெல்ட் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டு கைவினைஞர்களால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் இந்த பெல்ட், டாப் குவாலிட்டி லெதர் மற்றும் கோட்டட் கேஷ்வாஷ் கொண்டு நீண்ட காலம் உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விலைமதிப்புடைய இந்த கிளாசிக் மாடல் பெல்ட்டை விஜய் அணிந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. எளிமையானவராகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் விஜய் இவ்வளவு ஆடம்பரமான பிராண்டுகளைப் பயன்படுத்துவது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தவெக தொண்டர்களும் அதற்குத் தகுந்த பதிலடிகளைத் கொடுத்து வருகின்றனர். விஜய்யின் ஸ்டைலும், அவரது உடை சார்ந்த விசயங்களும் அரசியல் களத்தைத் தாண்டி பொதுவெளியிலும் தீவிர விவாதங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
