உங்க பான் கார்டும், ஆதார் கார்டும் தொலைந்துவிட்டதா?… கவலை வேண்டாம், இத பண்ண உடனே உங்க கையில் கிடைத்து விடும்…!

Spread the love

ஒருவருடைய அடையாளத்தை சரி பார்ப்பது முதல் வங்கிகளில்  கடன் வாங்குவது வரை பான் கார்டும், ஆதார் கார்டும் முக்கியமான ஆவணமாக மாறி உள்ளது. சில நேரங்களில் இந்த ஆவணங்களை அவசரத்தில் நாம் மறந்து விட்டால், ஆதார் எண்ணையும் பான்  எண்ணையும் ஆன்லைனில் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஆதார் கார்டு :

உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் மறந்து விட்டால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(UIDAI ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று “My Aadhaar” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து “Retrieve Lost or Forgotten EID/UID” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் ஆதார் கார்டில் உள்ள பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். இதை நிரப்பியதற்குப் பின், ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTPயை உள்ளிட்ட பிறகு, ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை வைத்து ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்யலாம்.

பான் கார்டு:

வருமான வரித்துறை இணையதளத்தை பார்வையிடுவதன்  மூலமாகவோ, NSDL அல்லது UTIITSL போர்ட்டலலின் உதவியுடன் பான் எண்ணை கண்டுபிடிக்கலாம். அதற்கு முதலில்  https://www.incometax.gov.in என்ற முகவரிக்குச் சென்று “Know Your PAN” அல்லது “Instant PAN through Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின் ஆதார் எண், பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பி OTPயை சரிபார்த்து பிறகு, பான் எண் திரையில் தோன்றும் அல்லது மின்னஞ்சல்/SMS  வழியாக அனுப்பப்படும். இந்த வசதியைப் பெற, மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பான் மற்றும் ஆதார் மிக முக்கியமாகிவிட்டது.

வங்கி கணக்கு திறப்பதற்கும், ஐபிஓ வில் முதலீடு செய்வதற்கும், வருமான வரி அறிக்கை, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் அரசாங்கத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், சிம் கார்டு வாங்குவதற்கும் கூட, இவ்விரண்டு ஆவணங்களும் தேவை. இதே சமயம் பான் மற்றும் ஆதாரை இனைத்திருப்பது கட்டாயமாகிவிட்டது. இல்லையெனில், பல சேவைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே அது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

Srimathi

Recent Posts

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

11 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

12 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

27 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

33 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

46 minutes ago