ஒருவருடைய அடையாளத்தை சரி பார்ப்பது முதல் வங்கிகளில் கடன் வாங்குவது வரை பான் கார்டும், ஆதார் கார்டும் முக்கியமான ஆவணமாக மாறி உள்ளது. சில நேரங்களில் இந்த ஆவணங்களை அவசரத்தில் நாம் மறந்து விட்டால், ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் ஆன்லைனில் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஆதார் கார்டு :
உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் மறந்து விட்டால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(UIDAI ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று “My Aadhaar” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து “Retrieve Lost or Forgotten EID/UID” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் ஆதார் கார்டில் உள்ள பெயர், மொபைல் நம்பர், மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். இதை நிரப்பியதற்குப் பின், ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTPயை உள்ளிட்ட பிறகு, ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை வைத்து ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்யலாம்.
பான் கார்டு:
வருமான வரித்துறை இணையதளத்தை பார்வையிடுவதன் மூலமாகவோ, NSDL அல்லது UTIITSL போர்ட்டலலின் உதவியுடன் பான் எண்ணை கண்டுபிடிக்கலாம். அதற்கு முதலில் https://www.incometax.gov.in என்ற முகவரிக்குச் சென்று “Know Your PAN” அல்லது “Instant PAN through Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின் ஆதார் எண், பிறந்த தேதி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பி OTPயை சரிபார்த்து பிறகு, பான் எண் திரையில் தோன்றும் அல்லது மின்னஞ்சல்/SMS வழியாக அனுப்பப்படும். இந்த வசதியைப் பெற, மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பான் மற்றும் ஆதார் மிக முக்கியமாகிவிட்டது.
வங்கி கணக்கு திறப்பதற்கும், ஐபிஓ வில் முதலீடு செய்வதற்கும், வருமான வரி அறிக்கை, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும் அரசாங்கத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், சிம் கார்டு வாங்குவதற்கும் கூட, இவ்விரண்டு ஆவணங்களும் தேவை. இதே சமயம் பான் மற்றும் ஆதாரை இனைத்திருப்பது கட்டாயமாகிவிட்டது. இல்லையெனில், பல சேவைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே அது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
