மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பெரியசாமி(45) தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி(42), பேரன் சிவ நித்திஷ்(3) என மூவரும் நேற்று பைக்கில் கீழக்குயில்குடி வரை சென்று விட்டு, திரும்பி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது பின்னாலிருந்து வந்த லாரி ஒன்று, பைக் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. எப்படியோ விபத்தில் பலியாகி விடுவோம் என்று சுதாரித்த மகேஸ்வரி, பைக்கில் இருந்த குழந்தையை தூக்கி சாலை ஓரத்தில் வீசினார். சட்டென்று நடந்த விபத்தில், பைக்கில் இருந்த பெரியசாமி சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மகேஸ்வரி எண்ணியது போல் லாரியின் சக்கரத்தில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்ட குழந்தையை , சில காயங்களுடன் அங்கிருந்தவர் மீட்டனர். ஆனால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர், லாரியை நிறுத்தாமல் சென்று விட்டார்.
இத்தகவலை அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெரியசாமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…