அம்மடியோ… ஜஸ்ட் மிஸ்… ஆக்ரோஷ யானையிடம் இருந்து… மின்னல் வேகத்தில் டூ-வீலரில் பறந்த லாரி டிரைவர்… மரணத்தின் பிடியில் தப்பிய திக் திக் வீடியோ…!!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே லாரி ஓட்டுநர் ஒருவர், திடீரென சீறிப் பாய்ந்த யானையிடம் இருந்து டூ-வீலரில் தப்பிச் செல்லும் திக் திக் காட்சி வைரலாகி வருகிறது. சாலையில் செல்பவர்களை அச்சத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவம், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரியை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். யானை அவரை நோக்கி ஆக்ரோஷமாகத் தாக்க வந்ததைக் கண்டதும், சிறிதும் யோசிக்காமல் அருகே இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் புறப்பட்டார்.

   

https://twitter.com/Autokabeer/status/2106624001745494102/video/1

   

யானை அவரை விடாமல் விரட்டி வந்தபோதிலும், ஓட்டுநர் திறம்பட வாகனத்தைச் செலுத்தி நூலிழையில் உயிர்தப்பினார். தற்போது காட்டு யானை இருசக்கர வாகனத்தை வெறியோடு துரத்தும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அப்பகுதி மக்களிடையே காட்டு விலங்குகளின் நடமாட்டம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.