லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது.
இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதே போல நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க படத்தின் போஸ்டர்களும், பாடல்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியதாவது, காஷ்மீரில் முதலில் படபிடிப்பை தொடங்கினோம். நாங்கள் அங்கு சென்றவுடன் விஜய் படபிடிப்பை இங்கு ஆரம்பிக்கலாமா என கேட்டார்.
அப்போது லோகேஷ் அதற்கு தானே வந்திருக்கிறோம் என கூறினார். நாங்கள் படப்பிடிப்பை நடத்தும்போது அங்கு 22 டிகிரி செல்சியஸ். விஜய், லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி ஜூனியர் டெக்னீஷியன் உள்பட அனைவரும் அந்த குளிரில் மிகவும் சிரமப்பட்டனர் என லலித் கூறினார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…