தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
ஆடியோ லான்ச் நடக்கவில்லையே என அப்செட் ஆன ரசிகர்களுக்கு லியோ ட்ரைலர் மிகப்பெரிய விருந்து வைத்தது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி வரும் இத்திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லியோ பட வெளியீடுக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ளது. எனவே திரைத்துறையை சார்ந்த முக்கியப்புள்ளிகளுக்கு நேற்று சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று சிறப்புக்காட்சி பார்த்த நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, #LCU என பதிவிட்டிருந்தார்.
Thalabathy @actorvijay Anna’s #Leo ???????????????? ????????@Dir_Lokesh excellent filmmaking , @anirudhofficial music , @anbariv master @7screenstudio ????????????#LCU ????! All the best team !
— Udhay (@Udhaystalin) October 17, 2023
லியோ எல்சியூ என்பதை உதயநிதி அறிவித்து விட்டார் என பல செய்திகளும் மீம்களும் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் அதற்கு கொடுத்துள்ள விளக்கம் செம ட்விஸ்ட்டாக உள்ளது. லியோ எல்சியூ தானா? உதயநிதி ட்வீட் போட்டு ரிவீல் செய்து விட்டாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதுக்கு பக்கத்துல அவர் கண்ணடிச்ச ஒரு எமோஜியை (????) போட்டிருந்தாரு பார்த்தீங்களா? லியோ எல்சியூவா? இல்லையா என்பது நாளைக்கு தியேட்டருக்கு போய் பாருங்க தெரியும் எனக் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…