பிரபல நடிகையுடன் துபாயில் லோகேஷ் கனகராஜ்… ஒருவேளை அப்படியா இருக்குமோ?… வைரலாகும் வீடியோ…

By Begam

Updated on:

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘கைதி’, இளைய தளபதி விஜய் உடன் ‘மாஸ்டர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய  இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

   

இளைய தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது. ‘விக்ரம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த ‘லெக்ஸஸ்’ கார் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக அளித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது விஜய் நடிப்பில், லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்பொழுது லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் , லோகேஷ் கனகராஜ் உடன் துபாயில் இருக்கும் வீடியோ ஒன்று இணையாயத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை கல்யாணி பிரியதர்ஷினியும் லியோ திரைப்படத்தில் நடிச்சுருக்காங்களா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் துபாயில் நடைபெறும் சைமா விருது வழங்கும் விழாவுக்கு சென்ற இருவரும் சந்தித்த கொண்ட வீடியோ தான் அது. இதோ அந்த  வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by RAAGA (@raaga.my)