எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய திமுக ஆட்சிக்கு மக்களிடம் பெரும் கெட்டப் பெயரை ஏற்படுத்தியதே சில உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் அத்துமீறல்களும், முறைகேடுகளும்தான் என்ற திடமான எண்ணம் அவரிடம் உள்ளதாகவும், இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்க அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் நலத்திட்டங்களையும் திறமையான அரசு அதிகாரிகள் குழுவின் நேரடிக் கண்காணிப்பில் எவ்வித ஊழலும் அட்ராசிட்டியும் இன்றி மிக நேர்த்தியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய உத்தியை முதல்வர் விஜய் கையில் எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.