தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியில், தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மகளிர் குழுக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாக, சுய உதவிக் குழுக்களில் இருந்து சிறு மற்றும் குறு தொழில் முனைவோராக மாற விரும்பும் பெண்களுக்கு, அவர்கள் வாங்கும் ரூ. 5 லட்சம் முதலீட்டுத் தொகை முழுமையாக மானியமாக மாற்றப்படும். இந்தத் தொகையை அவர்கள் அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் தொழில்முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களை வெற்றிகரமான தொழிலதிபர்களாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்
மேலும், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறப்பாகவும் நன்முறையிலும் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும் என்றும் தவெக-வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகளிர் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய பட்ஜெட்டில் வெளியாகும் எனப் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…